/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வாடிய மரக்கன்றுகளுக்கு தண்ணீர் விட்டு காப்பாற்றும் பசுமை மன்றம்
/
வாடிய மரக்கன்றுகளுக்கு தண்ணீர் விட்டு காப்பாற்றும் பசுமை மன்றம்
வாடிய மரக்கன்றுகளுக்கு தண்ணீர் விட்டு காப்பாற்றும் பசுமை மன்றம்
வாடிய மரக்கன்றுகளுக்கு தண்ணீர் விட்டு காப்பாற்றும் பசுமை மன்றம்
ADDED : செப் 27, 2025 11:19 PM

சிவகாசி: வாடிய மரக்கன்றுகளுக்கு தண்ணீர் விட்டு சிவகாசி பசுமை மன்றத்தினர் காப்பாற்றி வருகின்றனர்.
சிவகாசி பெரியகுளம் கண்மாய் கரையில் பசுமை மன்றம் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. இந்த கன்றுகளுக்கு தினமும் தண்ணீர் விடுவதற்காக தனித்தனியாக குழாய்களும் பதிக்கப்பட்டுள்ளது. கண்மாயில் தண்ணீர் இல்லாத நிலையில், மழையும் பெய்யாத நிலையில் செடிகள் வாடியது. இந்நிலையில் பசுமை மன்றத்தினர் வாகனம் மூலமாக வாடிய மரக்கன்றுகளை தண்ணீர் விட்டு காப்பாற்றுகின்றனர்.
பசுமை மன்ற நிர்வாகி சண்முக ரத்தினம், சிவகாசி ஸ்ரீவில்லிபுத்துார் ரோட்டில் நடப்பட்டிருந்த மரக்கன்றுகள் வாடிய போது இதேபோல் வாகனம் மூலமாக தண்ணீர் விடப்பட்டது. தற்போது மரக்கன்றுகள் பெரிய மரமாக வளர்ந்துள்ளது. அதே சமயத்தில் ரோடு விரிவாக்க பணிவாக மரங்களை வெட்டுவதற்கு நெடுஞ்சாலைத்துறையினர் முடிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு கடிதம் கொடுத்து மரங்களை வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது, என்றார்.