நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசி ஹார்ட்புல்னெஸ் தியான மையம், ரோட்டரி கிளப் ஆப் சிவகாசி டைமண்ட்ஸ் சார்பில் பசுமையின் பாதுகாப்பை உணர்த்திட மினி மாராத்தான் போட்டி நடந்தது. மேயர் சங்கீதா, அனில்குமார் டி.எஸ்.பி., துவக்கி வைத்தனர். பள்ளி மாணவர்கள், மக்கள் பங்கேற்றனர்.
கம்மவார் மண்டபத்தில் துவங்கிய மினி மாரத்தான் பைபாஸ் ரோடு, காரனேசன் விலக்கு, தேரடி முக்கு வழியாக வந்து மீண்டும் மண்டபத்தில் முடிந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ், மெடல் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஹார்ட்புல்னெஸ் தியான மைய உறுப்பினர்கள் செய்தனர்.

