ADDED : செப் 26, 2024 04:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரிஇயற்கை தோட்டக்கலை, நாட்டு நலப்பணித் திட்ட அணிகள், தமிழ்நாடு வனத்துறை சார்பில் பசுமை தமிழக தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள், பனை விதை நடும் விழா நடந்தது.
கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார். ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவராஜ் முன்னிலை வகித்தார். கல்லுாரி தாளாளர் அபிரூபன், முதல்வர் அசோக் வாழ்த்தினர்.
கல்லுாரி வளாகத்தில் 4000 மரக்கன்றுகள், 3000 பனை விதைகள் நடப்பட்டது. கல்லுாரி பல்வேறு துறையைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை கல்லுாரி இயற்கை தோட்டக்கலை மன்றம், நாட்டு நலப்பணி திட்ட அணிகள், வனத்துறையினர் செய்தனர்.