/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வீதிகளை குளுமையாக்கும் பசுமையான மரங்கள்-- இளைஞர் அணியினர் மரக்கன்றுகள் தந்து உதவி
/
வீதிகளை குளுமையாக்கும் பசுமையான மரங்கள்-- இளைஞர் அணியினர் மரக்கன்றுகள் தந்து உதவி
வீதிகளை குளுமையாக்கும் பசுமையான மரங்கள்-- இளைஞர் அணியினர் மரக்கன்றுகள் தந்து உதவி
வீதிகளை குளுமையாக்கும் பசுமையான மரங்கள்-- இளைஞர் அணியினர் மரக்கன்றுகள் தந்து உதவி
ADDED : மே 26, 2025 02:02 AM

மாறிவரும் உலகில் எதிர்கால சந்ததியினர் வாழ பொதுவாக உள்ள இயற்கை வளத்தை முடிந்த அளவு சிதைக்காமல் விட்டு செல்வதே நமது முக்கிய கடமையாகும்.
ரோடு விரிவாக்கம், தொழிற்சாலைகள் வளர்ச்சி குடியிருப்புகளுக்காகவும், ரோடு பணிகளுக்காகவும் விவசாய நிலங்கள் மரங்கள் அழிப்பு, போக்குவரத்தால் ஏற்படும் புகை உள்ளிட்ட காரணிகளால் பருவ நிலை மாற்றம், பூமி வெப்பமயமாதல் என இயற்கைக்கு மாறான சூழல் நிலவி வருகிறது. இதனால் அதிக மழை, வறட்சி, தண்ணீர் தட்டுப்பாடு என பல்வேறு சூழ்நிலைகளால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
பல இயற்கை பேரிடர்களை சந்தித்து பின் மக்களுக்கு மரங்கள் வளர்ப்பதின் அவசியம் தெரிந்து ஆர்வம் காட்டுகின்றனர். இதன் தொடர்ச்சியாக பிரச்சனைகளுக்கு தீர்வாக நம்மால் சுலபமாக மேற்கொள்ளும் முயற்சி மரக்கன்றுகளை நடுவது ஒன்றுதான். ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இயற்கை சூழ்ந்த பூமியாக இருந்த ராஜபாளையம் படிப்படியாக கான்கிரீட் காடுகளாக உருவெடுத்து பசுமை குறைந்து வந்தது.
இச்சூழ்நிலையில் இருந்து மீட்டு வாய்ப்புள்ள இடங்களில் மரங்களை வளர்த்து அவற்றை பேணி காக்க சில சமூக அமைப்பினர் மரங்களை நட்டு தொண்டு செய்து வருகின்றனர். அவ்வகையில் ராஜபாளையம் பச்சமடம் பகுதியில் ஆர்வமுள்ள இளைஞர் சங்கத்தினர் சிலர் மாணவர்கள் சிறுவர்களை ஒன்றிணைத்து அவரவர் குடியிருப்பு பகுதியில் மரக்கன்றுகளை வளர்த்து பசுமையாக்கும் பணிகளை செய்து வருகின்றனர். இதன் மூலம் அப்பகுதியில் உள்ள மெயின் தெருக்களில் நிழல் தரும் மரங்கள் அடர்ந்து வளர்ந்து பசுமையை போர்த்தி நிற்கின்றன.
குடியிருப்பு தெருக்களில் மரங்கள் வளர்ப்பதுடன் மழைக்காலங்களில் விதைப்பந்து உருவாக்கி, கண்மாய் ஓரங்களில் நடுவதற்கு பனை விதைகளை பெற்று தருவது, ஆடி மாதத்தில் இலவச விதைகளை சமூக அமைப்புகளோடு சேர்ந்து வழங்கி வருவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதன் காரணமாக பச்ச மடம், திருவனந்தபுரம் தெருப்பகுதிகளில் அனைத்தும் பசுமையாக மாறி வருகிறது.