/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
துப்பாக்கி, 35 பவுன் நகையுடன் பிடிப்பட்ட போலீஸ்காரர்
/
துப்பாக்கி, 35 பவுன் நகையுடன் பிடிப்பட்ட போலீஸ்காரர்
துப்பாக்கி, 35 பவுன் நகையுடன் பிடிப்பட்ட போலீஸ்காரர்
துப்பாக்கி, 35 பவுன் நகையுடன் பிடிப்பட்ட போலீஸ்காரர்
ADDED : பிப் 10, 2025 12:28 AM
விருதுநகர்; விருதுநகர் ஆயுதப்படை போலீஸ்காரரையும் மற்றொரு நபரையும் உரிமம் பெறாத துப்பாக்கி, 35 பவுன் தங்க நகையுடன் வச்சக்காரப்பட்டி போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
துாத்துக்குடி மாவட்டம் நாசரேத் பகுதியில் வழிபறியில் ஈடுபட்ட இருவர், திருட்டு டூவீலரில் தப்பிச்சென்றதாக விருதுநகர் மாவட்ட போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனால் சாத்துார் நான்கு வழிச்சாலையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து விருதுநகர் அருகே பட்டம்புதுாரில் சந்தேகத்திற்கு இடமாக இருவர் சுற்றி வருவதும், அவர்களிடம் கைத்துப்பாக்கி இருப்பதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இவர்களை ஆர்.ஆர்., நகர் அருகே வைத்து வச்சக்காரப்பட்டி போலீசார் பிடித்தனர். பிடிப்பட்டவரில் ஒருவர் தப்பிச்சென்றார்.
மற்றொருவர் விருதுநகர் மாவட்ட ஆயுதப்படை போலீஸ்காரர் என்பது தெரிந்தது. இவரிடம் இருந்து 35 பவுன் தங்க நகை, ஒரு கைத்துப்பாக்கி, டூவீலரை பறிமுதல் செய்தனர். இந்த கைத்துப்பாக்கியில் 5 தோட்டக்கள் மட்டுமே இருந்துள்ளன. பிடிப்பட்ட போலீஸ்காரர் மீது ஏற்கனவே வத்திராயிருப்பு ஸ்டேஷனில் மணல் கடத்தல் வழக்கு நிலுவையில் உள்ளது. தப்பிச்சென்ற மற்றொருவரையும் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.