/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பி.எஸ்.ஆர்., கல்லுாரியில் ஹேக்கத்தான் போட்டி
/
பி.எஸ்.ஆர்., கல்லுாரியில் ஹேக்கத்தான் போட்டி
ADDED : மார் 01, 2026 07:13 AM
சிவகாசி: சிவகாசி பி.எஸ்.ஆர்., பொறியியல் கல்லுாரி கணிப்பொறியியல் துறை கணினி இயந்திரங்கள் அமைப்பு சார்பில் தேசிய அளவிலான கல்லுாரிகளுக்கு இடையேயான 24 மணி நேர ஹேக்கத்தான் போட்டி ஆப் பிலிப்ஸ் 2கே26 என்ற தலைப்பில் நடந்தது.
பி.எஸ்.ஆர்., கல்விக் குழுமம் தாளாளர் சோலைசாமி தலைமை வகித்தார். நிர்வாக இயக்குனர் விக்னேஸ்வரி முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் செந்தில்குமார், டீன் மாரிசாமி துவக்கி வைத்தனர். அமெரிக்கா மோர்கன் ஸ்டான்லி சர்வீஸ் இன் கார்ப்பரேட்டட் துணை நிர்வாக அதிகாரி பாக்யராஜ் காந்திமதி மாளமுத்து , ஷிப்ட் இன் கார்பரேட்டட் தரவு பொறியாளர் சண்முகம் முத்து, கோயமுத்துார் நிஷாந்த் புல் ஸ்டாக் டெவலப்பர் கோடிங் மார்ட் டெக்னாலஜிஸ் கம்பெனி தலைமை தொழில்நுட்ப அதிகாரி கார்த்திகேயன், சேதுபதி புல் ஸ்டாக் டெவலப்பர் தலைமை தொழில்நுட்ப அதிகாரி தமிழரசன் ஆகியோர் பேசினர்.
தமிழகத்தின் பல்வேறு பொறியியல் கல்லுாரிகளை சேர்ந்த மாணவர்கள் புதுமையான தொழில்நுட்ப அலைபேசி செயலிகள், மென்பொருள் தீர்வு செயலிகளை உருவாக்கி தங்கள் திறன்களை வெளிப்படுத்தினர். வெற்றி பெற்ற அணிகளுக்கு முதல் பரிசாக ரூ. 15 ஆயிரம் 2, 3 ம் பரிசாக ரூ. 5 ஆயிரம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை கணிப்பொறியியல் துறை தலைவர் பாலசுப்பிரமணியன் பேராசிரியர்கள் ராம திலகம், பழனிகுமார், கவிதா செய்தனர்.

