ADDED : ஆக 12, 2025 06:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை மாங்குளத்தில் அமைந்துள்ள மினர்வா பப்ளிக் பள்ளியில் 2 நாட்கள் கலை கைவினை பொருட்கள் கண்காட்சி நடந்தது.
கண்காட்சியை ஜெயவிலாஸ் டெக்ஸ்டைல்ஸ் மில் நிர்வாக இயக்குனர் கார்த்திகேயன் திறந்து வைத்தார். பள்ளி தாளாளர் கண்ணன் வரவேற்றார். மாணவர்கள் வரைந்த ஓவியங்கள் அவர்கள் செய்த பல்வேறு வகையான கைவினை பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. மாணவர்களின் திறமையை வெளிக்கொணரும் விதமாக கண்காட்சி நடத்தப்பட்டது. பெற்றோர் மாணவர்கள் கண்காட்சியை கண்டு களித்தனர். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செய்தனர்.

