/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த வேண்டும்
/
கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த வேண்டும்
கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த வேண்டும்
கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த வேண்டும்
ADDED : ஆக 01, 2025 01:53 AM
ராஜபாளையம்: ''தமிழகத்தில் 3 லட்சம் தொழிலாளர்கள் கொண்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க தேர்தல் உடனே நடத்த வேண்டும் , ''என ஏ.ஐ.டி.யு.சி மாநில பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ராஜபாளையத்தில் ஏ.ஐ.டி.யு.சி தமிழ்நாடு கைத்தறி நெசவு தொழிலாளர் சம்மேளன மாநில குழு கூட்டம் நடந்தது. மாநில தலைவர் மணிமூர்த்தி தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் ராஜன் முன்னிலை விகித்தார்.
கூட்டத்தில் கைத்தறி நெசவுத் தொழிலை பாதிக்கும் ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்ய வேண்டும். கூட்டுறவு சங்கங்களின் தேங்கியுள்ள உற்பத்தி பொருட்களை கோ- ஆப் டெக்ஸ் மூலம் கொள்முதல் செய்து மக்களுக்கு மானிய விலையில் வழங்க வேண்டும். கைத்தறிக்கு ஒதுக்கீடு செய்த 11 ரக ஒதுக்கீட்டை அமல்படுத்திட வேண்டும்.
மூலப் பொருட்களை அரசே கொள்முதல் செய்து வழங்க வேண்டும். 3 லட்சம் கைத்தறி நெசவாளர்களைக் கொண்ட கூட்டுறவு சங்கத்திற்கு தேர்தல் நடத்த வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை கைத்தறிக்கு கூலி உயர்வு வழங்குவது போல் பெடல் தறிக்கும் கூலி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்திய கம்யூ., தேசிய குழு உறுப்பினர் ராமசாமி, நிர்வாக குழு உறுப்பினர் லிங்கம், மாவட்ட செயலாளர் செந்தில்குமார் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.மாவட்ட செயலாளர் முத்துமாரி, அமைப்பு செயலாளர் ரவி, பொருளாளர் விஜயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.