ADDED : நவ 21, 2024 04:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் தொலைந்து போன 20 அலைபேசிகளை போலீசார் கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.
அருப்புக்கோட்டை நகரின் பல பகுதிகளில் காணாமல் போன, தவறவிட்ட அலைபேசிகள் குறித்து போலீஸ் ஸ்டேஷனில் உரியவர்கள் புகார் செய்தனர்.
இதையடுத்து போலீசார்கள் 20 நபர்களின் அலைபேசிகளை கண்டு பிடித்து அருப்புக்கோட்டை ஏ.எஸ்.பி., மதிவாணன் உரியவர்களிடம் ஒப்படைத்தார். இன்ஸ்பெக்டர்கள் செல்லப் பாண்டியன், மணிக்குமார், எஸ்.ஐ., க்கள், குற்றப்பிரிவு போலீசார்கள் கலந்து கொண்டனர்.