நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி: சிவகாசி அருகே திருத்தங்கல்லில் தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில் மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியிட்ட அரசாணை 140 ஐ திரும்பப் பெறுவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் சந்திப்பு கையெழுத்து இயக்கம் நடந்தது.
சங்க மாவட்ட தலைவர் குமார் பாண்டி தலைமை வகித்தார். முருகன் கோபால் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் ஹரி பாலகிருஷ்ணன், அரசு ஊழியர் சங்கம் மாவட்ட தலைவர் பாண்டித்துரை, செயலாளர் கருப்பையா, சமூக நலத்துறை மாநில பொருளாளர் முருகானந்தம், நகராட்சி மாநகராட்சி ஊழியர் சங்கம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மணிபாலா பாண்டியன், மாவட்ட இணைச் செயலாளர் தேவராஜ், மாவட்ட செயலாளர் முருகன் செந்தில்வேல் பேசினர்.