நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் சி.எஸ்.ஐ., சர்ச்சில் அறுப்பின் ஸ்தோத்திர பண்டிகை, சபை குரு பால் தினகரன் தலைமையில் நடந்தது.
மதுரை சாலமன் தேவ செய்தி அளித்தார். சபை ஊழியர்கள் வேத பாடங்களை வாசித்தனர். திரு விருந்து ஆராதனை நடந்தது. பின்னர் திருச்சபை மக்கள் பொருட்களாகவும், காணிக்கையாகவும் தங்களது நன்றிகளை கடவுளுக்கு படைத்தனர். காணிக்கையாக வந்த பொருட்கள் ஏலம் விடப்பட்டது. விழாவில் திரளான சபை மக்கள் பங்கேற்றனர்.