/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆபத்தான முறையில் வேனில் கொண்டு செல்லப்படும் வைக்கோல்
/
ஆபத்தான முறையில் வேனில் கொண்டு செல்லப்படும் வைக்கோல்
ஆபத்தான முறையில் வேனில் கொண்டு செல்லப்படும் வைக்கோல்
ஆபத்தான முறையில் வேனில் கொண்டு செல்லப்படும் வைக்கோல்
ADDED : ஏப் 22, 2025 05:31 AM

காரியாபட்டி: காரியாபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நெல் அறுவடை செய்யப்பட்டது. இதையடுத்து கேரளாவிலிருந்து வரும் வியாபாரிகள் வைக்கோல்களை விலைக்கு வாங்கி செல்கின்றனர். அதற்காக வயில்களிலே இயந்திர உதவியுடன் கட்டுகளாக கட்டப்படுகின்றன. இதனை மினி வேனில் ஏற்றி ஒரு இடத்தில் குவித்து வைக்கின்றனர். பின், பெரிய லாரிகளில் ஏற்றி கேரளாவுக்கு கொண்டு செல்கின்றனர்.
அவ்வாறு, காரியாபட்டி ஆவியூர் அருகே மினி வேனில் ஆபத்தான முறையில் முன் கண்ணாடியை மறைத்து வைக்கோல் கட்டுகளை ஏற்றி சென்றனர். எதிரே வரும் வாகனம் தெரியாமல் விபத்து ஏற்படும் அச்சம் உள்ளது. இது ஒருபுறம் இருக்க, அதே மினி வேன் ஓட்டுனருக்கு சரி வர ரோடு தெரியாமல் பள்ளத்தில் கவிழும் ஆபத்து உள்ளது. விபத்திற்கு முன் கண்காணித்து, ஆபத்தான முறையில் வைக்கோல் கட்டுகளை ஏற்றி செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்து, உரிமையாளர், ஓட்டுனர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.