ADDED : ஆக 14, 2025 02:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: அனைத்து பள்ளி களுக்கும் அடிப்படை, அமைச்சு பணியாளர்கள் நியமனம், பதவி உயர்வு முரண்பாடுகளை களைவது, பணி பாதுகாப்பு சட்டம் ஆகியவை கோரி விருதுநகரில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் அண்ணாதுரை தலைமை வகித்தார். தலைமையிட செயலாளர் மூக்கையா, அமைப்புச்செயலாளர் காளிராஜ், முன்னாள் நில பொருளாளர் அனந்த ராமன் பேசினர். மகளிர் இணை செயலாளர் சுரேகா நன்றி கூறினார்.