/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பட்டாசு கொளுத்தும் குழந்தைகளை பெற்றோர் கண்காணிக்க வேண்டும் சுகாதார அலுவலர் அறிவுரை
/
பட்டாசு கொளுத்தும் குழந்தைகளை பெற்றோர் கண்காணிக்க வேண்டும் சுகாதார அலுவலர் அறிவுரை
பட்டாசு கொளுத்தும் குழந்தைகளை பெற்றோர் கண்காணிக்க வேண்டும் சுகாதார அலுவலர் அறிவுரை
பட்டாசு கொளுத்தும் குழந்தைகளை பெற்றோர் கண்காணிக்க வேண்டும் சுகாதார அலுவலர் அறிவுரை
ADDED : அக் 16, 2025 11:54 PM
விருதுநகர்: பட்டாசு கொளுத்தும் போது குழந்தைகளை பெற்றோர் கண்காணிக்க வேண்டும் என விருதுநகர் மாவட்ட சுகாதார அலுவலர் யசோதாமணி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:
பட்டாசு கொளுத்தும் போது குழந்தைகள், இளம் வயதினருக்கு காயங்கள் ஏற்படுவதற்கு கவனக்குறைவாக செயல்படுவதே காரணம். பட்டாசுகளை அருகே வைத்துக்கொண்டு வெடிப்பதால் தீப்பொறி மூலம் மொத்த பட்டாசுகளும் வெடித்து தீவிர காயங்கள் ஏற்படுகிறது.
பெற்றோர் கண்காணிப்பில் திறந்த வெளியில் குழந்தைகள் பட்டாசு கொளுத்த வேண்டும். எளிதில் தீப்பற்றும் தன்மையிலான ஆடைகள், சில்க் பட்டு புடவைகள் அணிந்து பட்டாசு கொளுத்துவதை தவிர்க்க வேண்டும். காட்டன் ஆடைகள், அணிவது சிறந்தது. கட்டாயம் காலணி அணிந்திருக்க வேண்டும்.
பட்டாசு கொளுத்தும் போது அருகே ஒரு பாத்திரத்தில் கண்டிப்பாக தண்ணீர் வைத்திருக்க வேண்டும்.
பட்டாசு கொளுத்திய கையோடு உணவு உட்கொண்டால் மருந்து உடலுக்குள் சென்று பாதிப்பு ஏற்படுத்தும், கைகளை நன்றாக கழுவிய பின் உணவு அருந்த வேண்டும்.
சுவாசப்பிரச்னை உள்ளவர்கள் தீபாவளி அன்று மட்டும் வெளியே செல்வதை தவிர்க்கவும். பட்டாசு கெளுத்தும் போது ஒரு கை துாரத்தில் நிற்க வேண்டும். பட்டாசுகளை கையில் வைத்தும், மின்கம்பங்கள், கம்பிகளுக்கு அருகே கொளுத்தக்கூடாது.
மெழுகுவர்த்திகள், விளக்குகள் எரியும் இடத்தில் பட்டாசு இருப்பு வைக்கக்கூடாது. காயம் ஏற்பட்ட இடத்தை நன்றாக தண்ணீரில் சோப்பு போட்டு கழுவ வேண்டும்.
அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், தாலுகா, மாவட்ட தலைமை மருத்துவமனைகள், அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மருத்துவக்குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது, என்றார்.