/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாத்துார், தாயில்பட்டியில் பலத்த மழை
/
சாத்துார், தாயில்பட்டியில் பலத்த மழை
ADDED : ஏப் 15, 2025 05:20 AM
சாத்துார்: வெம்பக்கோட்டை தாயில்பட்டி பகுதியில் நேற்று மாலை பெய்த கோடை மழை காரணமாக மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வெம்பக்கோட்டை எதிர்கோட்டை மடத்துப்பட்டி தாயில்பட்டி விஜய கரிசல்குளம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கடும் கோடை வெயில் சுட்டெரித்து வந்தது. நேற்று மாலை 5:30 மணிக்கு இடி மின்னலுடன் மழை பெய்ய துவங்கியது. இந்த மழை ஒரு மணி நேரம் நீடித்தது. தமிழ் வருட பிறப்பான நேற்று விவசாயிகள் சிறப்பு பூஜைகள் நடத்தி உழவு பணியில் ஈடுபட்டனர்.இந்த நிலையில் மாலையில் பெய்த கோடை மழை காரணமாக வெப்பம் தணிந்தது.
மேலும் வருடத்தின் முதல் நாளிலேயே கோடை மழை பெய்ததால் மானாவாரி விவசாயிகளும் மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கடும் கோடை வெயிலால் பாதிக்கப்பட்டிருந்த சாத்தூர் பகுதியிலும் இரவு 7:00 மணி முதல் சாரலுடன் மழை பெய்யத் துவங்கியது.குளிர் காற்றுடன் இடி மின்னலும் அடித்ததால் மக்கள் கோடை மழையை ரசித்தனர்.