/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சதுரகிரியில் கனமழை அதிகாரிகள் ஆய்வு
/
சதுரகிரியில் கனமழை அதிகாரிகள் ஆய்வு
ADDED : டிச 14, 2024 02:10 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்:சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் மலைப்பகுதியில் கனமழை பெய்து வரும் நிலையில் அங்குள்ள நீர்வரத்து ஓடைகளை பேரிடர் மேலாண்மை கண்காணிப்பு குழு அதிகாரி கணேசன், மதுரை மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இரண்டு நாட்களாக சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் மலைப்பகுதியில் கன மழை பெய்து தாணிப்பாறை ஓடைகளில் கடும் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் கார்த்திகை பிரதோஷம், பவுர்ணமி வழிபாட்டிற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில் பேரிடர் மேலாண்மை கண்காணிப்பு குழு அலுவலர் கணேசன், உசிலம்பட்டி ஆர்.டி.ஓ., சண்முகவேல், பேரையூர் தாசில்தார் செல்லப்பாண்டி குழுவினர் நேற்று மதியம் 3:00 மணிக்கு தாணிப்பாறை மலையடிவாரம் வந்தனர். அங்கிருந்து மாங்கனி ஓடை வரை தண்ணீரின் வரத்தை ஆய்வு செய்தனர். கோயில் அலுவலர்கள், வனத்துறையினர் உடனிருந்தனர்.