/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தேசிய நெடுஞ்சாலையில் கனரக வாகனங்கள்;
/
தேசிய நெடுஞ்சாலையில் கனரக வாகனங்கள்;
ADDED : ஜன 09, 2025 04:45 AM
ஸ்ரீவில்லிபுத்துார்:
ஸ்ரீவில்லிபுத்தூரில் தேசிய நெடுஞ்சாலை ரோட்டின் இருபுறமும் கனரக வாகனங்கள் நிறுத்தப்படுவதால் வாகன ஓட்டிகள் விபத்திற்கு ஆளாகும் அபாயம் ஏற்பட்டு வருகிறது.
ஸ்ரீவில்லிபுத்துார் இந்திரா நகரில் இருந்து அரசு பஸ் டிப்போ, ராமகிருஷ்ணாபுரம், மாரியம்மன் கோவில், உழவர் சந்தை, சர்ச் சந்திப்பு, தேரடி இறக்கம், திருப்பாற்கடல் வளைவு, ஆண்டாள் தியேட்டர்வழியாக மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயில் வரை தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் கனரக லாரிகள், வேன்கள் நிறுத்தப்படுகிறது. குறிப்பாக உழவர் சந்தையில் இருந்து கிளைச்சிறை வரை
அதிகளவில் பள்ளி மாணவர்கள், அரசு மருத்துவமனைக்கு செல்லும் முதியவர்கள் செல்லும் நிலையில், இங்கு நிறுத்தப்பட்டுள்ள கனரக வாகனங்களால் விபத்து அபாயம் காணப்படுகிறது.
எனவே, தேசிய நெடுஞ்சாலை ரோட்டில் இருபுறமும் நிறுத்தப்படும் கனரக வாகனங்களை ஒழுங்குபடுத்த போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.