/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பட்டாசு வெடி விபத்தில் இறந்தவர்களுக்கு உதவி
/
பட்டாசு வெடி விபத்தில் இறந்தவர்களுக்கு உதவி
ADDED : பிப் 18, 2026 07:42 AM
விருதுநகர்: விருதுநகரில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் ரூ.54 லட்சத்து 60 ஆயிரத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
கலெக்டர் சுகபுத்ரா தலைமை வகித்து பல்வேறு பட்டாசு விபத்துக்களில் இறந்த 9 பேருக்கு தலா ரூ.4 லட்சம், ஐ.சி.யு.,வில் இறந்த இருவருக்கு தலா ரூ.ஒரு லட்சம், காயமடைந்த 7 பேருக்கு தலா ரூ.50 எனமுதல்வரின் நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கப்பட்டது.
மேலும்மின்சாரம் தாக்கி இறந்த இருவரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் வீதம் ரூ.6 லட்சம் காசோலைகள், வி.இலுப்பைகுளம் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் 2025-26ஆம் ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டில் சிறிய அளவிலான பால்பண்ணை மூலம் 4 சதவீத வட்டி மானியத்துடன் 3 கறவை உறுப்பினர்களுக்கு தலா ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் வீதம் ரூ.8 லட்சத்து 10 ஆயிரத்திற்கான காசோலைகள் என ரூ.54 இலட்சத்து 60 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கினார்.
டி.ஆர்.ஓ., ஆனந்தி உள்ளிட்டோர் பங் கேற்றனர்.

