நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகரில் தாய், தந்தை இல்லாமல் சகோதரி ஆதரவில் கல்வி படிக்கும் மாணவிக்கு இசை பயிற்சி செய்ய கலெக்டர் விருப்புரிமை நிதியில் இருந்து உதவி செய்யப்பட்டது.
விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாணவி முத்துலெட்சுமி, இவர் தாய், தந்தை இல்லாமல் சகோதரியின் ஆதரவில் கல்வி படிக்கிறார். மாநில, மாவட்ட அளவில் விளையாட்டு, பாட்டு போட்டிகளில் பரிசு பெற்றுள்ள நிலையில், இசை பயிற்சிக்கு உதவ கோரி மனு அளித்திருந்தார். இதை பரிசீலனை செய்து கலெக்டர் ஜெயசீலன், ரூ.5 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கினார்.