/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கொலை வழக்கு சாட்சிக்கு பாதுகாப்பு கோரி வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
/
கொலை வழக்கு சாட்சிக்கு பாதுகாப்பு கோரி வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
கொலை வழக்கு சாட்சிக்கு பாதுகாப்பு கோரி வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
கொலை வழக்கு சாட்சிக்கு பாதுகாப்பு கோரி வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஜன 23, 2024 04:05 AM
மதுரை: விருதுநகர் மாவட்டம் சாத்துாரில் நடந்த ஒரு கொலை தொடர்பாக சாட்சிகளுக்கு பாதுகாப்பு கோரியதில் தமிழக அரசிடம் விபரம் பெற்று தெரிவிக்க அதன் வழக்கறிஞருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
சாத்துார் அருகே இருக்கன்குடி மாரீஸ்வரன் தாக்கல் செய்த மனு:
இருக்கன்குடி மாரியம்மன் கோயில் நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக எங்கள் பகுதியை சேர்ந்த சிலர் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இதில் ஏற்பட்ட முன்விரோதத்தில் ஒரு தரப்பை சேர்ந்த சிலர் 2023 அக். 10ல் காந்திராஜனை சாத்துார் பஸ் ஸ்டாண்ட் டாஸ்மாக் கடை அருகே கொலை செய்தனர். அதை நேரில் பார்த்த சாட்சி நான். இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளை போலீசார் கைது செய்யவில்லை.
அரசு தரப்பில் உறுதியளித்தபடி காந்திராஜன் குடும்பத்திற்கு இடைக்கால நிவாரணமாக ரூ.6 லட்சம் வழங்கப்பட்டது. சிலரால் எனக்கு அச்சுறுத்தல் உள்ளது. சாட்சிகளுக்கு போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட காந்திராஜன் குடும்பத்திற்கு நிலம், அவரது மனைவிக்கு அரசுப் பணி வழங்கக்கோரி தமிழக உள்துறை செயலர், விருதுநகர் கலெக்டருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி வி.பவானி சுப்பராயன் விசாரித்தார்.
அரசு தரப்பு: காந்திராஜன் குடும்பத்திற்கு நிலம், அவரது மனைவிக்கு ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் உதவியாளர் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தது.
நீதிபதி: சாட்சிகளுக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து தமிழக அரசிடம் விபரம் பெற்று அதன் வழக்கறிஞர் பிப்.,9 ல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.

