/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நான்குவழிச்சாலை பிரிவு ரோட்டில் எரியாத உயர் கோபுர மின் விளக்குகள்
/
நான்குவழிச்சாலை பிரிவு ரோட்டில் எரியாத உயர் கோபுர மின் விளக்குகள்
நான்குவழிச்சாலை பிரிவு ரோட்டில் எரியாத உயர் கோபுர மின் விளக்குகள்
நான்குவழிச்சாலை பிரிவு ரோட்டில் எரியாத உயர் கோபுர மின் விளக்குகள்
ADDED : ஜன 14, 2025 10:48 PM
காரியாபட்டி; மதுரை தூத்துக்குடி நான்கு வழிச் சாலை பிரிவு ரோடுகளில் உள்ள உயர் கோபுர மின் விளக்குகள் எரியாததால் ரோட்டை கடக்க சிரமப்படுகின்றனர். சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச் சாலையில் காரியாபட்டி, கல்குறிச்சி, அருப்புக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முக்கிய ஊர்களுக்கு செல்லும் பிரிவு ரோடுகள் உள்ளன.
அதிவேகமாக வரும் வாகனங்கள் பிரிவு ரோடுகள் இருப்பதை அறிந்து கவனமாக செல்ல ஆங்காங்கே விளக்குகள், உயர் கோபுர மின் விளக்குகள் எரிய விடப்பட்டுள்ளன. ரோட்டை கடக்க முயலும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் எளிதில் கடக்க முடிந்தது.
இந்நிலையில் கல்குறிச்சி அருகே தோனுகால், விருதுநகர், சமத்துவபுரம் அருகே உள்ள உயர் கோபுர மின் விளக்குகள் எரியவில்லை. இருளாக உள்ளது. அங்கு விபத்து நடக்காமல் இருக்க பேரிக்காடு அமைத்து தடுப்பு வைக்கப்பட்டுள்ளது. அருகில் வந்தவுடன் தடுப்பு தெரிவதால் விபத்து அச்சம் உள்ளது.
ரோட்டை கடக்க முயலும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அடிக்கடி விபத்து நடக்கிறது. இதனை தடுக்க ஆங்காங்கே எரியாமல் இருக்கும் உயர் கோபுரமின் விளக்குகளை எறிய விட நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றனர்.