/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்டார்ட் ஆகாத ஹைவே பேட்ரோல் வாகனங்கள்
/
ஸ்டார்ட் ஆகாத ஹைவே பேட்ரோல் வாகனங்கள்
ADDED : ஏப் 25, 2025 06:11 AM

திருச்சுழி: திருச்சுழி அருகே எம்.ரெட்டியபட்டியில் ஸ்டார்ட் ஆகாத ஹைவே பேட்ரோல் வாகனத்தை போலீசார் தள்ளிச் சென்றனர்.
நான்கு வழி சாலைகளில் ஏற்படும் விபத்துக்களை உடனடியாக கண்டறியவும், வாகனங்களை சோதனை செய்யவும், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுதல், சாலை விதிகளை கடைபிடித்தல் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்வது ஹைவே பேட்ரோல் போலீசாரின் பணி. இவர்களுக்கென்று குறிப்பிட்ட ஏரியாக்கள் ஒதுக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும்.
திருச்சுழி அருகே எம்.ரெட்டியபட்டி, நரிக்குடி திருச்சுழி உள்ளிட்ட பகுதிகளை ரோந்து பணிகள் செய்வதற்கு ஹைவே பேட்ரோல் போலீசாருக்கு வாகனம் ஒதுக்கப்பட்டது. இந்த வாகனம் பல ஆண்டுகள் ஆன நிலையில் ரோந்து செல்லும்போது அடிக்கடி பழுதாகி விடுகிறது. சில நேரங்களில் வாகனம் ஸ்டார்ட் ஆக மறுக்கிறது. உடன் போலீசார் அந்த பகுதி மக்கள் உதவியுடன் வாகனங்களை தள்ளி ஸ்டார்ட் செய்ய வேண்டிய நிலைமையில் உள்ளனர்.
மாவட்டத்தில் உள்ள பழைய ஹைவே பேட்ரோல் வாகனங்களை புதியதாக வழங்குவதற்கு மாவட்ட போலீஸ் நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதுடன் இருக்கின்ற வாகனங்களை பராமரிப்பு செய்வதற்குரிய நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.

