/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நெடுஞ்சாலைத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
/
நெடுஞ்சாலைத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
ADDED : அக் 26, 2025 06:53 AM
சாத்துார்: சாத்துார் நெடுஞ்சாலைத் துறையினர் பருவ மழையை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளதாக உதவி கோட்ட செயற்பொறியாளர் உலகம்மாள் தெரிவித்தார்.
சாத்துார் நெடுஞ்சாலை துறையின் கோட்டத்தில் உள்ள அனைத்து சாலைகளிலும் உள்ள பாலங்களில் நீர்வழிப் பாதையில் மழைநீர் தங்கு தடை இன்றி செல்ல ஏதுவாகவும், வட கிழக்கு பருவமழையின் போது ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ளவும்,முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.நீர் செல்லும் பாலங்களில் உள்ள அடைப்புகள் நீக்கப்பட்டுள்ளது.
உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் சாலையில் மழையால் பள்ளம் போன்ற பாதிப்பு ஏற்பட்டால் அதை உடனடியாக சரி செய்வதற்கு பொக்லைன் இயந்திரமும், 1500 மணல் மூடைகளும்,எச்சரிக்கை தடுப்பு அறிவிப்பு பதாகைகள், தயாராக உள்ளன.
மேலும் சாலை ஓரத்தில் உள்ள மின் கம்பங்கள், மரங்கள், எச்சரிக்கை பலகைகளில் வர்ணம் பூசும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.சாலை ஓரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த முள் செடிகள், வெட்டி அகற்றப்பட்டுள்ளது.பெரும்பாலான சாலைகளில் ஏற்பட்ட பள்ளங்கள் சரி செய்யப்பட்டுள்ளது.
சாலையில் எச்சரிக்கை ஒலிப்பான்கள் மற்றும்வேகத்தடைகள் மீது வெள்ளை பூசும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. பலத்த மழை பெய்தாலும் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்படாமல் இருப்பதற்கு பருவ மழை காலத்தை எதிர்கொள்ள நெடுஞ்சாலைத்துறையினர் தயார் நிலையில் உள்ளனர் என்றார்.

