/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அத்திக்கோயிலில் அங்கன்வாடி தேவை கலெக்டரிடம் முறையிட்ட மலைவாழ் மக்கள்

ADDED : ஜூலை 11, 2025 02:59 AM
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே கான்சாபுரம் அத்திக் கோயிலில் வசிக்கும் மலைவாழ் பழங்குடியின மக்களை சந்தித்த கலெக்டர் சுகபுத்ராவிடம், அங்கன்வாடி மையம் அமைத்து தாருங்கள் என கோரிக்கை விடுத்தனர்.
நேற்று மதியம் 3:00 மணிக்கு தாணிப்பாறை ராம் நகரில் மலைவாழ் மக்களை சந்தித்தார். தங்கள் பகுதியில் போதிய அடிப்படை வசதிகள் செய்து தரவும், ஆடி அமாவாசையை முன்னிட்டு மலைப்பாதையில் தற்காலிக கடைகள் அமைக்க அனுமதிக்க கோரினர்.
கான்சாபுரம் அத்தி கோயில் மலைவாழ் மக்கள்நேரில் சந்தித்தபோது, அப்பகுதியினர் கூடுதல் பஸ் வசதி, மருத்துவ வசதி, அங்கன்வாடி மையம் அமைத்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். விரைவில் செய்வது தருவதாக கலெக்டர் உறுதி அளித்தார்.
வத்திராயிருப்பு தாலுகா அலுவலகத்தில் ஆய்வு செய்தார். கான்சாபுரம் நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளின் குறைகளை கேட்டுஇருந்தார்.
ஆய்வின் போது மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் பாலாஜி, தாசில்தார் ஆண்டாள், வட்டார வளர்ச்சி அலுவலர்லலிதா, ராம்கோ பழங்குடியினர் சேவை பிரிவு மேலாளர் முருகேசன் பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.