ADDED : செப் 23, 2024 05:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி : காரியாபட்டி பேரூராட்சி அலுவலகம் எதிரே ரூ. 6 கோடி மதிப்புள்ள 18 சென்ட் அரசு புறம்போக்கு இடத்தில் சர்ச் கட்டப்பட்டது. இதனை அகற்றக்கோரி இந்து முன்னணி சார்பில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.
எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நடவடிக்கை எடுக்க கோரி நேற்று காரியாபட்டி பஸ் ஸ்டாண்ட் முன் ஒன்றிய தலைவர் பழனிச்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நெல்லை மாவட்ட கோட்டச் செயலாளர் ஆறுமுகசாமி, மாவட்ட செயலாளர் பிரபு பேசினர்.