/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவில்லிபுத்துாரில் ஹிந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
/
ஸ்ரீவில்லிபுத்துாரில் ஹிந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 02, 2025 11:44 PM
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துாரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது ஹிந்து முன்னணி நிர்வாகிகள் யுவராஜ், வினோத் ஆகியோரை தாக்கிய சிவகாசி டி.எஸ்.பி.பாஸ்கரை கண்டித்தும், அவர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோரி ஹிந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் யுவராஜ் தலைமை வகித்தார். வினோத் முன்னிலை வகித்தார். ஹிந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் கிஷோர் குமார், இணை தலைவர் பொன்னையா, துணை தலைவர் ஜெயக்குமார், மாநில செயலாளர் குற்றால நாதன், பா.ஜனதா மாவட்ட தலைவர் சரவணதுரை, சோலையப்பன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்று பேசினர். 200 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டிருந்தது.
ஆர்பாட்டத்திற்கு போலீஸ் தரப்பில் அனுமதி மறுத்த நிலையில், இதுவரை இல்லாத வகையில் ஏராளமானோர் திரண்டதால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.