/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வங்கதேச ஹிந்துக்கள் படுகொலையை கண்டித்து ஹிந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம் 191 பேர் கைது

ADDED : டிச 05, 2024 05:31 AM

விருதுநகர்: விருதுநகரில் வங்கதேச ஹிந்துக்கள் படுகொலையை கண்டித்து தேசபந்து மைதானத்தில் ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற ஹிந்து அமைப்பினர் 191 பேரை கைது செய்தனர்.
வங்கதேச ஹிந்து உரிமை மீட்பு குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளரான ஆர்.எஸ்.எஸ்.,ஐ சேர்ந்த கண்ணன் தலைமை வகித்தார். ஹிந்து முன்னணி மாநில செயலாளர் முத்துக்குமார், பா.ஜ., கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன், மேற்கு மாவட்ட தலைவர் சரவணதுரைராஜா, தென்னிந்திய பாரத ப்ளாக் மாவட்ட தலைவர் கணேஷ்குமார், பி.எம்.எஸ்., கணேசன், பா.ஜ., பொதுக்குழு உறுப்பினர் பார்த்தசாரதி, செயற்குழு உறுப்பினர் கஜேந்திரன், அனைத்து பரிவார் இயக்க நிர்வாகிகள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
வங்கதேச ஹிந்துக்கள் மீதான தாக்குதல், படுகொலைகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். போலீசார் அனுமதி மறுத்தனர். இதையடுத்து 191 பேரை கைது செய்து அருப்புக்கோட்டை ரோட்டில் உள்ள மண்டபத்தில் அடைக்கப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டனர்.