/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஹிந்து மக்கள் கட்சி செயற்குழு கூட்டம்
/
ஹிந்து மக்கள் கட்சி செயற்குழு கூட்டம்
ADDED : மார் 14, 2024 11:48 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகரில் ஹிந்து மக்கள் கட்சியின் தென் மண்டல செயற்குழு கூட்டம் தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையில் நடந்தது.
இதில் விருதுநகர் கவுசிகா நதியை சுத்தம் செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், திருநெல்வேலி பேட்டையில் மூடப்பட்ட நுாற்பாலையை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், துாத்துக்குடி மாவட்டத்தின் ஏரி, குளம், கண்மாய்களை துார்வார வேண்டும் உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

