/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஹிந்து மக்கள் கட்சி செயற்குழு கூட்டம்
/
ஹிந்து மக்கள் கட்சி செயற்குழு கூட்டம்
ADDED : ஜூலை 19, 2025 11:31 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் ஹிந்து மக்கள் கட்சி தொகுதி செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் நடந்தது.
தொகுதி தலைவர் தனராஜ் முன்னிலை வகித்தார். நகர, ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர். நகர தலைவர் மனோஜ் நன்றி கூறினார்.
கூட்டத்தில் இடிக்கப்படும் பஸ் ஸ்டாண்ட் கடைகளை விரைந்து கட்டுதல், நகரில் அடிக்கடி உடையும் குடிநீர் குழாய்களை சீரமைத்தல்,முறையான குடிநீர் சப்ளை செய்தல், நல்லதங்காள் கோயிலை அறநிலையத்துறை கையகப்படுத்துவதை கைவிடுதல், சதுரகிரியில் போதிய அடிப்படை வசதிகள் செய்தல், ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் புற காவல் நிலையம் அமைத்தல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.