/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பசுமை சோலையாக மருத்துவமனை வளாகம் ;நோயாளிகள் மகிழ்ச்சி
/
பசுமை சோலையாக மருத்துவமனை வளாகம் ;நோயாளிகள் மகிழ்ச்சி
பசுமை சோலையாக மருத்துவமனை வளாகம் ;நோயாளிகள் மகிழ்ச்சி
பசுமை சோலையாக மருத்துவமனை வளாகம் ;நோயாளிகள் மகிழ்ச்சி
ADDED : மார் 17, 2024 11:56 PM

நம் முன்னோர்கள் இயற்கையோடு ஒன்றிணைத்து வாழ்ந்தார்கள். ஆனால் இன்றைய நவீன காலத்தில் நாம் இயற்கையோடு ஒன்றிணையாமல் செயற்கையோடு பின்னி பிணைந்து வாழ்கின்றோம். இயற்கையை பாதுகாத்து அதை நம் அடுத்த சந்ததியினரிடம் கையளிக்க வேண்டியது ஒவ்வொருவரின் தலையாய கடமை.
பசுமை இயற்கையின் அற்புதம். சுற்றுப் புறத்தைத் துாய்மையாக வைத்திருந்தால் தான் ஆரோக்கியமான வாழ்வை வாழலாம். பச்சைப்பசேலென்ற நிறம் கண்ணுக்கு மட்டுமல்ல மனதிற்கும் ஆனந்தமே. இயற்கை அன்னையை நாம் பாதுகாப்பதன் அவசியத்தை உணர்ந்து மரம் நடுவதும் அவற்றைப் பாதுகாப்பதும் முக்கியமான கடமை. அப்போது தான் இந்தியா பசுமை அடையும்.
நகரமும் மாசில்லாமல் இருக்கும். பசுமையைப் பேண மரங்களை நட வேண்டும். மரங்கள் மனித சமுதாயத்திற்கு பல்வேறு பலன்களை அளிக்கின்றன. மரங்களும் அடர்ந்த காடுகளும் சுவாசத்திற்கு உதவுவதால் மரங்கள் நடுவது அவசியம்.
அந்த வகையில் சிவகாசி அரசு மருத்துவமனையில் பசுமையை பேணும் வகையில் மருத்துவமனை வளாகம் முழுவதும் மரங்கள் பராமரிக்கப்படுகிறது. மருத்துவமனையில் உள்ள அனைத்து பிரிவுகளிலும் மரங்கள் அடர்ந்து காணப்படுகிறது. மேலும் மரக்கன்றுகளை வளர்ப்பதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 2018ல் மருத்துவமனை வளாகத்தில் தன்னார்வலர்களின் சார்பில் பசுமை தோட்டம் அமைக்கப்பட்டது. இதில் வேம்பு, வேங்கை, வாழை பல்வேறு வகையான மூலிகை செடிகள் நடப்பட்டு பராமரிக்கப்படுகிறது. இதனால் மருத்துவமனைக்கு வருகிறவர்கள் பசுமை சூழலைக் கண்டு மயங்கி நிற்கின்றனர். நோயாளிகளுக்கு மனதிற்கு இதமான சூழ்நிலை நிலவுவதால் அவர்கள் மருத்துவமனையில் உள்ள மனநிலை இன்றி இயல்பாக உள்ளனர்.
தவிர நோயாளிகளை பார்க்க வருபவர்கள், மரநிழலில் ஓய்வெடுத்துக் கொள்கின்றனர். மருத்துவமனையில் உள்ளோம் என்ற மனநிலை இல்லாமல் இயற்கையோடு இணைந்திருக்கிறோம் என்ற மனநிலையில் உள்ளனர். நடைப்பயிற்சி மேற்கொள்ளவும் சுகமான சூழல் நிலவுகிறது.
சுற்றுப் புறத்தைத் துாய்மையாக வைத்திருந்தால் தான் ஆரோக்கியமான வாழ்வை வாழலாம். பச்சைப்பசேலென்ற நிறம் கண்ணுக்கு மட்டுமல்ல மனதிற்கும் ஆனந்தமே. இயற்கை அன்னையை நாம் பாதுகாப்பதன் அவசியத்தை உணர்ந்து மரம் நடுவதும் அவற்றைப் பாதுகாப்பது முக்கியமான கடமை. தற்போதுள்ள சூழ்நிலையில் சுத்தமான காற்று என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதனை தவிர்த்து சுத்தமான காற்று வேண்டும் என்றால் அதிகமான மரங்கள் வேண்டும். இதனாலேயே மருத்துவமனையில் அதிகமான மரங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
- அய்யனார், தலைமை டாக்டர் அரசு மருத்துவமனை, சிவகாசி.

