/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வீடு ஒதுக்கீட்டாளர்களுக்கு ஒரே தவணையில் நிலுவை
/
வீடு ஒதுக்கீட்டாளர்களுக்கு ஒரே தவணையில் நிலுவை
ADDED : ஆக 19, 2025 12:40 AM
விருதுநகர்; தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், மதுரை வீட்டு வசதி பிரிவு ஒதுக்கீட்டாளர்கள் தவணைக் காலம் முடிவுற்றும் தவணைத் தொகை செலுத்தாத ஒதுக்கீடுதாரர்கள் 2021 மார்ச் 31க்குள் வட்டி தள்ளுபடி போக செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை ஒரே தவணையாக செலுத்தி பயன் பெறலாம்.
கலெக்டர் சுகபுத்ரா செய்திக்குறிப்பு: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், மதுரை வீட்டு வசதி பிரிவிற்குட்பட்ட மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களில் உள்ள திட்டப்பகுதிகளில் உள்ள மனைகள், வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒதுக்கீடு பெற்று 2015 மார்ச் 31க்கு முன்பு தவணைக் காலம் முடிவுற்றும் தவணைத் தொகை செலுத்தாத ஒதுக்கீடுதாரர்களுக்கு வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை மூலம் அரசாணை பிறப்பிக்கப்பட்டு வட்டி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளன.
எனவே தவணைத் தொகை சரிவர செலுத்தாத ஒதுக்கீடுதாரர்கள் இந்த சலுகையை பயன்படுத்தி 2026 மார்ச் 31க்குள் வட்டி தள்ளுபடி போக செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை ஒரே தவணையாக செலுத்தி பயன்பெறலாம், என்றார்.