/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
திறப்பு விழாவுக்கு முன்பே பூச்சுக்கள் பெயரும் வீடுகள்
/
திறப்பு விழாவுக்கு முன்பே பூச்சுக்கள் பெயரும் வீடுகள்
திறப்பு விழாவுக்கு முன்பே பூச்சுக்கள் பெயரும் வீடுகள்
திறப்பு விழாவுக்கு முன்பே பூச்சுக்கள் பெயரும் வீடுகள்
ADDED : ஜூன் 14, 2025 12:00 AM

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே குல்லுார்சந்தையில் கட்டப்பட்டுள்ள அகதிகள் முகாமில் உள்ள வீடுகள் திறப்பு விழா காணும் முன்பே சிமென்ட் பூச்சுக்கள் பெயர்ந்து விழுகிறது.
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த குல்லூர் சந்தையில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் உள்ளது. இங்கு வசிப்பவர்களுக்கு புதிய வீடுகள் கட்டி தருவதற்காக 14 கோடி ரூபாய் நிதியில் முதற் கட்டமாக 244 வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டது.
அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் 2024ல், இதற்கான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு இறுதி கட்ட பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. இந்நிலையில் வீடுகளின் வெளிப்புற சுவரில் சிமென்ட் பூச்சுக்கள் பெயர்ந்துள்ளன.
கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா நடைபெறுவதற்குள் வீடுகளில் காரைகள் பெயர்ந்து விழுவது, வீடுகளின் தரத்தை கேள்வி குறியாக ஆக்கியுள்ளது.
கலெக்டரும், திட்ட அலுவலரும் வீடுகளின் தரத்தை ஆய்வு செய்து, தரமான வீடுகளை கட்டி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.