ADDED : ஜூன் 24, 2025 03:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நரிக்குடி: நரிக்குடியில் சூறாவளி வீசியதில், மின் கம்பங்கள், வீடுகள் சேதம் அடைந்தன.
நரிக்குடி பகுதியில் நேற்று முன்தினம் மாலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த காற்று வீசியது. நரிக்குடி பிரண்டைகுளத்தில் வீசிய சூறாவளிக்கு மின்கம்பங்கள், மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. ரோட்டில் மின்கம்பங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஏராளமான வீடுகளின் ஓடுகள் காற்றுக்க பறந்து விழுந்தன. உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நிவாரணம் வழங்க அக்கிராமத்தினர் வலியுறுத்தினர்.