/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
2250 பேருக்கு கனவு இல்ல திட்டத்தில் வீடு அமைச்சர் தகவல்
/
2250 பேருக்கு கனவு இல்ல திட்டத்தில் வீடு அமைச்சர் தகவல்
2250 பேருக்கு கனவு இல்ல திட்டத்தில் வீடு அமைச்சர் தகவல்
2250 பேருக்கு கனவு இல்ல திட்டத்தில் வீடு அமைச்சர் தகவல்
ADDED : ஜூலை 03, 2025 03:10 AM

அருப்புக்கோட்டை:விருதுநகர் மாவட்டத்திற்கு கனவு இல்லம் திட்டத்தில் இதுவரை 2 ஆயிரத்து 250 பயனாளிகளுக்கு வீடு கட்ட அரசு நிதி வழங்கியுள்ளது, என அமைச்சர்சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அரசின் கனவு இல்லத் திட்ட பயனாளிகளுக்கு ஆணை வழங்கும் விழா நடந்தது. கலெக்டர்சுகபுத்ரா தலைமை வகித்தார்.
நுாறு பயனாளிகளுக்கு கனவு இல்ல திட்ட ஆணை வழங்கி அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசியதாவது:
நம் முதல்வர் ஒரு தனி மனிதனுக்கு குடியிருக்க இடம் வீடு கட்டாயம் வேண்டும் என்பதன் அடிப்படையில் கனவு இல்ல திட்டம் துவங்கி ஒரு வீட்டிற்கு 3.50 லட்சம்நிதி ஒதுக்கி வழங்கி வருகிறார்.
நம் மாவட்டத்திற்கு இதுவரை 2 ஆயிரத்து 250 பயனாளிகளுக்கு வழங்கியுள்ளோம். வீட்டை விரைவாக கட்டுங்கள், என்றார்.