ADDED : அக் 08, 2025 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்; விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு மனித சங்கிலி ஊர்வலம் டீன் ஜெயசிங் தலைமையில் நடந்தது.மார்பக புற்றுநோய் சிகிச்சைகள், முன்பரிசோதனைகள், தாய்ப்பால் மகத்துவம், மார்பக புற்றுநோய்க்கானஅறுவை சிகிச்சை, மேமோகிராம் பரிசோதனை குறித்து மக்களிடம் பேசினார்.
கண்காணிப்பாளர் அரவிந்த் பாபு, துணை மருத்துவமனை கண்காணிப்பாளர் அன்புவேல், உதவி ஆர்.எம்.ஓ., வரதீஸ்வரி உள்பட டாக்டர்கள், செவிலியர்கள் பலர் பங்கேற்றனர்.