/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
'என்னை உள்ளே வைத்தால் போலீஸ் ஸ்டேஷனே இருக்காது' பெண் போலீசை மிரட்டிய பார் ஊழியர்

ADDED : டிச 06, 2025 02:16 AM
சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே விஸ்வநத்தம் பகுதி தனியார் பார் ஊழியர் ஈஸ்வரன் 26. மது போதையில் கையில் காயத்துடன் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு வந்தார்.
அவரிடம் அங்கிருந்த பெண் போலீஸ் எப்படி காயம் ஏற்பட்டது என கேட்டார். அதற்கு அவர், டாக்டரிடம் இவர்களெல்லாம் என்னிடம் எதற்காக கேள்வி கேட்கிறார்கள் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது மற்றொரு போலீஸ்காரர் அவரை சமாதானம் செய்ய முயற்சித்தபோது , அண்ணே நீ என்னை அடி, உனக்கு உரிமை இருக்கு. இவங்க யாரு என்னை கேள்வி கேட்க என அவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
நீங்கள் போலீஸ் என்றால் உங்களோடு வைத்துக் கொள்ளுங்கள், எனக்கு விசுவாசமாக 100 பேர் இருக்கிறார்கள். என்னை உள்ளே வைத்தால் போலீஸ் ஸ்டேஷனே இருக்காது வேக வைத்து விடுவார்கள் என மிரட்டல் விடுத்தார். இது குறித்த வீடியோ வெளியாகி உள்ளது.