ADDED : டிச 06, 2025 02:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரை சேர்ந்தவர் நவீன் குமார் 25, கூலி தொழிலாளி. இவர் 2022-ல் சகோதரி முறை கொண்ட 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
மகளிர் போலீசார் அவரை கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்துார் போக்சோ நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்கில், அவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்தும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 5 லட்சம் மாவட்ட நிர்வாகம் இழப்பீடு வழங்க பரிந்துரை செய்தும் நீதிபதி புஷ்பராணி தீர்ப்பளித்தார்.

