/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
காலி மது பாட்டில்களை திரும்ப பெற ஆட்களை தேர்வு செய்ய வேண்டும் சங்க மாநில பொதுச் செயலாளர் பேட்டி

ADDED : டிச 06, 2025 02:17 AM
சாத்துார்: ''காலி மது பாட்டில்களை திரும்ப பெற அவுட்சோர்சிங் முறையில் புதியதாக ஆட்களை தேர்வு செய்ய வேண்டும் ''என, தமிழக அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் ஜி.வி.ராஜா தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதற்காக டாஸ்மாக் கடைகளில் மது வாங்குபவர் களிடம் இருந்து காலி மது பாட்டில்களை பெற்றுக்கொண்டு அவர்களுக்கு ரூ. 10 திரும்ப வழங்க வேண்டும் என்ற அரசு உத்தரவை விற்பனையாளர்களே செயல்படுத்த வேண்டிய நிலை உள்ளது.
இதனால் விற்பனையாளர்கள் கூடுதல் பணி சுமைக்கு ஆளாகும் நிலை உள்ளது. இதற்கு அனைத்து தொழிற்சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அவுட்சோர்சிங் முறையில் புதியதாக ஆட்களை தேர்வு செய்து அவர்கள் மூலம் இந்த திட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும்.
காலி மது பாட்டில்களை வைப்பதற்கு போதுமான இடவசதியும் கடைகளில் இல்லை. எனவே மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும். இதை வலியுறுத்தி விருதுநகர் டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முன்டிச. 8ல் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்றார்.