/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தன்னம்பிக்கை இருந்தால் வாழ்க்கையில் சாதிக்கலாம்
/
தன்னம்பிக்கை இருந்தால் வாழ்க்கையில் சாதிக்கலாம்
ADDED : மார் 08, 2024 12:21 PM

சிவகாசி: ''மாணவர்களுக்கு சேவை மனப்பான்மை, தன்னம்பிக்கை இருந்தால் வாழ்க்கையில் சாதிக்கலாம்,'' என மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் குமார் பேசினார்.
சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி 61 வது கல்லுாரி நாள் விழா, நிறுவனர் நாள் விழா கொண்டாடப்பட்டது. கல்லுாரி செயலர் அய்யன் கோடீஸ்வரன் தலைமை வகித்தார். கல்லுாரி தாளாளர் அபிரூபன் வரவேற்றார். முதல்வர் அசோக் ஆண்டறிக்கை வாசித்தார்.
மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் குமார் பேசியதாவது; இன்றைய மாணவர்கள் சேவை மனப்பான்மை, உழைப்பு, விடாமுயற்சி, தன்னம்பிக்கை, மனிதநேயம் உடையவர்களாக இருந்தால் வாழ்க்கையில் சாதிக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு நினைவு பரிசு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
கல்லுாரி நிர்வாக குழு உறுப்பினர் அதிபதி குடும்பத்தினர், பணி நிறைவு பெற்ற முதல்வர்கள், பேராசிரியர்கள், ஆசிரியரல்லா பணியாளர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவி ஆர்த்தி நன்றி கூறினார்.

