ADDED : ஜன 16, 2025 04:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு சமுதாய நல்லிணக்க பேரவை, சேவா பாரதி, கிரிடாபாரதி அமைப்புகளின் சார்பில் இளவட்டக்கல் தூக்கும் போட்டி மங்காபுரம் இந்து மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்தது.
நாடார் மகாஜன சங்க மாவட்ட செயலாளர் ஜெயராஜ் தலைமை வகித்தார். ஆர். எஸ். எஸ். அமைப்பு நிர்வாகிகள் மாரிச்சாமி, ஜோதி குமார், சங்கரலிங்கம் முன்னிலை வகித்தனர்.
இந்து முன்னணி மாநில நிர்வாகி பொன்னையா, கிரீடபாரதி மாநில பொறுப்பாளர் பெரியசாமி, ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என பலரும் 48 முதல் 110 கிலோ எடையுள்ள இளவட்டக்கல்லை தூக்கி பார்வையாளர்களிடம் பாராட்டு பெற்றனர்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

