UPDATED : நவ 15, 2026 08:06 PM
ADDED : நவ 15, 2026 08:06 PM
சிவகாசி: சிவகாசியில் 15 ஆண்டுகளுக்கு முன்பு சட்டபூர்வ நடைமுறை இன்றி தத்து கொடுக்கப்பட்ட தங்கையை கண்டுபிடிக்க கோரி சகோதரர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் புகார் கொடுத்தார்.
சிவகாசியை சேர்ந்த ராஜவேல் என்பவர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு மின்னஞ்சல் மூலம் கொடுத்த புகார் மனுவில், தனது பெற்றோரான சஞ்சீவி சந்திரன் உமாராணிக்கு 2011 செப். 10ல் தனியார் மருத்துவமனையில் மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்தது. இக்குழந்தையை தனது தாய் மாமாவான வெம்பக்கோட்டை ரோடு பகுதியைச் சேர்ந்த ஸ்ரீகணேசன் என்பவர் எந்த ஒரு சட்டபூர்வ நடைமுறையும் இன்றி வேறொருவருக்கு தத்து கொடுத்துவிட்டார். தற்போது அக்குழந்தை பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறாரா, மேலும் குழந்தையை கண்டறிய வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார். இதனைத் தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மீனாட்சி, டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். போலீசார் ஸ்ரீகணேசன் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
