/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மலை அடிவார பகுதிகளில் விதி மீறி செயல்படும் விடுதிகள் பாதிப்பு : வன விலங்குகள் வனப்பகுதியிலிருந்து வெளியேறும் ஆபத்து

ADDED : ஏப் 15, 2025 05:19 AM

மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியை புலிகள் சரணாலயமாக 2021ல் அரசு அறிவித்துள்ளது. இதனை அடுத்து பல்வகை உயிர் பெருக்கத்திற்கான இயற்கை சூழல் பகுதியை பாதிக்கும் என்பதற்காக வரையறுக்கப்பட்ட பகுதிகளில் கட்டடங்கள் கட்டவும், புதிய குடியிருப்புகள் வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தவோ, வேளாண் நிலங்களில் வணிக நோக்கத்துடன் மாறுபாடு செய்யவோ அனுமதித்தால் பாதிப்பிற்கு உள்ளாகும் என இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விதிமுறைகளை மீறி ஏற்கனவே உள்ள விவசாய விளை நிலங்களை பல்வேறு தரப்பினர் கைமாற்றி வணிக நோக்கில் சுற்றுலா பயணிகளுக்கு தங்கும் விடுதியாக மாற்றுவதும், ஏற்கனவே உள்ள நிலங்களில் நீச்சல் குளம் ஏசி போன்ற மாடியுடன் கூடிய சொகுசு வீடுகளையும் கட்டி வருவது தொடர்ந்துள்ளது.
மாவட்டத்தில் வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்துார், சேத்துார், செண்பகத் தோப்பு, தேவதானம், ராஜபாளையம் உள்ளிட்ட வனத்தை ஒட்டிய பகுதி விவசாய நிலங்களில் மாறுபாடுகள் நடந்து வருகின்றன. குற்றாலம் உள்ளிட்ட பிரபலமான சுற்றுலா தலங்கள் கண்காணிப்பிற்கும், அதிக கட்டணமும் விதிக்கப்படுவதால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இணையதள விளம்பரம் மூலம் வந்து தங்குபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதனால் இப்பகுதியில் பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளான யானை, மான், முயல், காட்டெருமை, உடும்பு, மிளா போன்றவற்றிற்கு வாழ்விடம் பாதிப்பு ஏற்படுவதுடன் இவர்கள் உணவு பொருட்களுடன் வீசி செல்லும் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவு பொருட்களால் உயிர் சூழல் பாதிக்கிறது.
இது போன்ற சூழலில் விவசாயம் என்ற போர்வையில் வணிகப் பயன்பாட்டால் மின்வாரியம், குடிநீர், வரி வருவாய் பாதிப்பதுடன் சமூக விரோத செயல்களும், போதை போன்ற இளைஞர்களை தனிமைக்கு ஈர்க்கும் செயல்கள் ஊக்குவிக்கப்படுகிறது.
விதி மீறல்கள் குறித்து வனத்துறை மாவட்ட நிர்வாகம் கணக்கெடுத்து கடும் நடவடிக்கை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.