/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சத்திரப்பட்டி கண்மாயில் கழிவு நீர் கலப்பதால் பாதிப்பு
/
சத்திரப்பட்டி கண்மாயில் கழிவு நீர் கலப்பதால் பாதிப்பு
சத்திரப்பட்டி கண்மாயில் கழிவு நீர் கலப்பதால் பாதிப்பு
சத்திரப்பட்டி கண்மாயில் கழிவு நீர் கலப்பதால் பாதிப்பு
ADDED : மே 25, 2025 05:18 AM
சாத்துார் : சாத்துார் சத்திரப்பட்டி கண்மாயில் கழிவு நீர் கலப்பதால் கால்நடைகள் பாதிக்கப்படுவதால் அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாத்துார் ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான கண்மாய் சத்திரப்பட்டியில் உள்ளது. இந்த கண்மாய் மூலம் 100 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வந்த நிலையில் தொடர்ந்து கண்மாய் நிரம்பாததால் தற்போது மிகவும் குறைந்த பரப்பிலான நிலத்திலேயே விவசாய பணிகள் நடந்து வருகிறது.
சடையம்பட்டி கண்மாயில் மறுகால் பாயும் தண்ணீரும், ஓ மேட்டுப்பட்டி பெய்து வரும் மழைநீர் இந்த சத்திரப்பட்டி மல்லிகை தெருவழியாக வரும் நீர்வரத்து ஓடை வழியாக கண்மாய்க்கு வந்தடைகின்றன.
இந்த நீர் வரத்து ஓடையில் தற்போது வீடுகளில் இருந்து வெளியாகும் கழிவு நீரும் தீப்பெட்டி தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் ரசாயன கழிவுகளும் கலந்து வருகின்றன.
தற்போது இந்த பகுதியில் கால்நடை வளர்ப்பே முக்கிய தொழிலாக உள்ளது.கண்மாயில் மேய்ந்து வரும் கால்நடைகள் அங்கு தேங்கியுள்ள தண்ணீரை பருகும் போது பல்வேறு நோய்த்தொற்றுக்கு ஆளாகி அவதிப்படும் நிலை உள்ளது.
இதன் காரணமாக கால்நடை வளர்ப்பவர்கள் மிகுந்த நஷ்டத்திற்கு ஆளாகி வருகின்றனர்.எனவே கண்மாய் நீர் வரத்து ஓடை வழியாக கண்மாய்க்கு வரும் தண்ணீரில் கழிவு நீர் கலப்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.