/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கோடை விடுமுறையில் குழந்தைகளை பணிக்கு அமர்த்தினால் சிறை, அபராதம்
/
கோடை விடுமுறையில் குழந்தைகளை பணிக்கு அமர்த்தினால் சிறை, அபராதம்
கோடை விடுமுறையில் குழந்தைகளை பணிக்கு அமர்த்தினால் சிறை, அபராதம்
கோடை விடுமுறையில் குழந்தைகளை பணிக்கு அமர்த்தினால் சிறை, அபராதம்
ADDED : ஏப் 30, 2025 06:40 AM
விருதுநகர்; மாவட்டத்தில் கோடை விடுமுறையில்குழந்தை, வளரிளம் பருவ தொழிலாளர்களை பணிக்கமர்த்தும் நிறுவனம் மீது ரூ.50,000 வரை அல்லது 2 ஆண்டு வரை சிறை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மைவிழிச்செல்வி கூறினார்.
அவரது செய்திக்குறிப்பு:தற்போது பள்ளி தேர்வுகள் முடிவடைந்து மாணவர்களுக்கு  விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.மாவட்ட தடுப்பு படை கூட்டாய்வின் போது விடுமுறை நாட்களில் 18 வயது நிறைவடையாத குழந்தை, வளரிளம் பருவ தொழிலாளர்களை பணிக்கமர்த்தியது கண்டறியப்பட்டால் அந்நிறுவனம் மீது அபராதம் விதிக்கப்படும்.
மாணவர்கள் பள்ளியில் பயில்வதாகவும் பள்ளி விடுமுறை நாட்களில் மட்டுமே பணிபுரிவதாக தெரிவித்தாலும் பணிக்கமர்த்திய நிறுவனம் மீது குற்றத்திற்கேற்ப எப்.ஐ.ஆர்., பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். பெற்றோருக்கும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். விளம்பரங்கள், குறும்படங்கள், திரைப்படங்கள், வர்த்தக ரீதியிலான கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றிலும் யூடியுப், சமூக வலைத்தளங்களில்குழந்தை, வளரிளம் பருவ தொழிலாளர்களைகலெக்டரிடம் அனுமதி சான்று பெற்று ஈடுபடுத்தலாம்.
புகார்களை 1098 சைல்டு லைன் உதவி எண் அல்லது pencil.gov.in என்ற வலைதளத்தில் தெரிவிக்கலாம். குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்கவும் மக்களும், அனைத்து வணிகர்களும், வர்த்தகர் சங்கங்களும், பெற்றோரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும், என்றார்.

