/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
2035ல் விண்வெளியில் இந்தியா ஆராய்ச்சி மையம் அமைக்கும் இஸ்ரோ துணை இயக்குநர் கிரகதுரை பேச்சு

ADDED : பிப் 09, 2025 01:14 AM

விருதுநகர்:''வரும் 2035ல், விண்வெளியில் இந்தியா ஆராய்ச்சி மையம் அமைக்கும்,'' என, விருதுநகரில், இஸ்ரோ ஸ்ரீஹரிகோட்டா துணை இயக்குநர் கிரகதுரை பேசினார்.
விருதுநகர் கல்லுாரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற அவர் பேசியதாவது:
இஸ்ரோ அனுப்பும் அனைத்து ராக்கெட்களையும் ஆன்லைனில் பார்க்கும்படி ஒளிபரப்பு செய்து வருகிறோம். உலகில் 11 நாடுகள் விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. அதில், ஆறு நாடுகள் மட்டுமே சாதனை படைத்துள்ளது. இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. 2035ல், விண்வெளியில் இந்தியா ஆராய்ச்சி மையம் அமைக்கும்.
குலசேகரப்பட்டினத்தில் சிறிய அளவிலான ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படவுள்ளது. மருத்துவம், தொழில், கல்வி உட்பட அனைத்து துறைகளிலும் ஆராய்ச்சி செய்து விபரங்களை திரட்ட வேண்டும். அதை ஆய்வு செய்து தீர்வு கொடுத்தால்தான், இந்தியா 2047ல் வளர்ந்த நாடாக மாறும்.
இதை சாத்தியமாக்குவது மாணவர்கள் கையில் உள்ளது. மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தில் நிறைய ஆராய்ச்சிகள் செய்ய வேண்டியுள்ளது. அதன் முதற்கட்டமாக ஆளில்லா விண்கலத்தை அனுப்பி சோதனை செய்யப்படஉள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.