/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசியில் குழாய் உடைந்து குடிநீர் வீண்
/
சிவகாசியில் குழாய் உடைந்து குடிநீர் வீண்
ADDED : நவ 14, 2024 06:51 AM

சிவகாசி ; சிவகாசி காமராஜர் சிலை அருகே போலீஸ் ஸ்டேஷன் செல்லும் ரோட்டில் குழாய் உடைந்து குடிநீர் வீணாவதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
சிவகாசி சேர்மன் சண்முகம் நாடார் ரோட்டில் உள்ள மேல்நிலைக் குடிநீர் தொட்டியில் இருந்து நகர் முழுவதும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அண்ணாதுரை காய்கறி மார்க்கெட், காமராஜர் சிலை வழியே போலீஸ் ஸ்டேஷன் ரோட்டில் பதிக்கப்பட்டுள்ள குழாய் மூலமாக அப்பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
காமராஜர் சிலை அருகே போலீஸ் ஸ்டேஷன் ரோட்டில் குழாய் உடைந்து குடிநீர் வெளியேறி வீணாக ரோட்டில் ஓடுகிறது. தவிர குழாய் உடைந்ததால் ரோடும் சேதம் அடைந்து விட்டது. இதனால் இப்பகுதியில் உள்ள மார்க்கெட்டுக்கு வருகின்ற மக்கள், பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே உடனடியாக சேதம் அடைந்த குழாயை சரி செய்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

