/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இரு வேறு சம்பவங்களில் வேன்கள் கவிழ்ந்து 11 பேர் காயம்
/
இரு வேறு சம்பவங்களில் வேன்கள் கவிழ்ந்து 11 பேர் காயம்
இரு வேறு சம்பவங்களில் வேன்கள் கவிழ்ந்து 11 பேர் காயம்
இரு வேறு சம்பவங்களில் வேன்கள் கவிழ்ந்து 11 பேர் காயம்
ADDED : நவ 04, 2024 05:34 AM

அருப்புக்கோட்டை : விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை அருகே அடுத்தடுத்து இருவேறு பகுதிகளில் கந்த சஷ்டிக்காக திருச்செந்துார் சென்று கொண்டிருந்த வேன்கள் கவிழ்ந்து 11பேர் காயம் அடைந்தனர்.
திருப்பூரில் இருந்து முருக பக்தர்கள் 20 பேர் கந்த சஷ்டி விழாவிற்காக வேனில் அருப்புக்கோட்டை வழியாக திருச்செந்துார் சென்று கொண்டிருந்தனர். நேற்று காலை 6:00 மணிக்கு அருப்புக்கோட்டை அருகே மதுரை -- தூத்துக்குடி நான்கு வழிச்சாலை ராமானுஜபுரம் விலக்கு பகுதியில் வேன் நிலை தடுமாறி டிவைடரில் மோதி ரோட்டில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் லேசான காயம் அடைந்தனர். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
* இதே போன்று பாண்டிச்சேரியில் இருந்து 15 முருக பக்தர்கள் திருச்செந்துார் நோக்கி சென்று கொண்டிருந்தபோது அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி புதுார் விலக்கு பகுதியில் வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 6 முருக பக்தர்கள் லேசான காயம் அடைந்தனர். இதுகுறித்து பந்தல்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.