/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விருதுநகரில் 20 அடிக்கு ‛ பீறிட்டு அடித்த கழிவு நீர்'
/
விருதுநகரில் 20 அடிக்கு ‛ பீறிட்டு அடித்த கழிவு நீர்'
விருதுநகரில் 20 அடிக்கு ‛ பீறிட்டு அடித்த கழிவு நீர்'
விருதுநகரில் 20 அடிக்கு ‛ பீறிட்டு அடித்த கழிவு நீர்'
ADDED : அக் 09, 2024 04:42 AM

விருதுநகர் : விருதுநகரின் பாத்திமா நகர் ரோட்டில் கழிவு நீரேற்று நிலையத்தில் இருந்து சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய் உடைந்து நேற்று காலையில் கழிவு நீர் 20 அடிக்கு பீறிட்டு அடித்தது. துார்நாற்றத்தை தாங்க முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
விருதுநகர் ஆற்றுப்பாலம் அருகே கழிவு நீரேற்று நிலையத்தில் இருந்து கழிவு நீரை சுத்திகரிப்பு செய்வதற்காக மாத்தி நாயக்கன்ப்பட்டியில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய் பாத்திமா நகர் வழியாக செல்கிறது. இந்த குழாய்கள் முறையாக பராமரிக்கப்படாததால் துருப்பிடித்து சேதமாகி இருந்தது.
பாத்திமா நகர் ரோடும், சாத்துார் ரோடும் இணையும் இடத்தில் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் கழிவு நீர் குழாய் நேற்று காலையில் உடைந்தது. இதனால் கழிவு நீர் உடைந்த பகுதி வழியாக ரோட்டிற்கு மேல் 20 அடிக்கு பீறிட்டு அடித்து வெளியேறியது. இந்த கழிவு நீர் அவ்வழியாக ரோட்டில் சென்றவர்கள் மீது விழுந்தது.
மேலும் அதிக துார்நாற்றத்துடன் வெளியேறியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். நகராட்சி பகுதிகளில் அநேக இடங்களில் கழிவு நீர் குழாய்கள் முறையாக பராமரிக்கப்படாமல் இருப்பதே இதற்கு காரணம். அதனால் ஆங்காங்கே சேதமான இடங்கள் வழியாக கழிவு நீர் வெளியேறுவது வழக்கமானதாக மாறிவிட்டது.
ஆனால் சாத்துார் ரோட்டில் 20 அடி உயரத்திற்கு கழிவு நீர் பீறிட்டு அடித்ததால் மக்கள் அவதிக்குள்ளாக வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே நகராட்சி பகுதிகளில் ஆண்டுகள் பல கடந்த கழிவுநீர் குழாய்களை மாற்றுவதற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.