/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
செயல்படாத குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்
/
செயல்படாத குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்
ADDED : பிப் 20, 2025 06:57 AM

தளவாய்புரம்: தளவாய்புரம் அருகே செட்டியார்பட்டி பேரூராட்சியில் நான்கு ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் காட்சி பொருளாக உள்ளதை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
செட்டியார்பட்டி பேரூராட்சி எதிரே நான்கு ஆண்களுக்கு முன் சுமார் ரூ.7 லட்சம் செலவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்கப்பட்டது. பொதுமக்கள், வியாபாரிகள் யாரையும் எதிர்பார்க்காமல் ஐந்து ரூபாய் நாணயம் செலுத்தி சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பெற்றுக்கொள்ளும் வகையில் தொடங்கப்பட்டு மக்களின் வரவேற்பை பெற்று செயல்பட்டது.
நாளடைவில் பல்வேறு காரணங்களை கூறி செயல்படாமல் வைத்ததால் தேடி வரும் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதுடன் அதிக விலை கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலை ஏற்பட்டது. கோடைகாலம் என்பதால் தண்ணீருக்கு அதிக செலவிடும் நிலை ஏற்பட்டுள்ளதால் காட்சி பொருளாக உள்ள சுத்திகரிப்பு நிலையத்தை பழுது நீக்கி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பேரூராட்சி நிர்வாகத்தை மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இது குறித்து கணேசன்: பேரூராட்சி எதிரே அமைந்துள்ள சுத்திகரிப்பு நிலையத்தை இதன் அருகில் உள்ள சந்தை, பஸ் ஸ்டாண்ட், வியாபார நிறுவனத்தினர் கூலி தொழிலாளர்கள் பயன்படுத்தி வந்தனர். நீண்ட காலமாக பழுது காரணம் கூறி காட்சி பொருளாக வைக்கப்பட்டுள்ளதால் அடித்தட்டு மக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

