/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வளர்ச்சிப் பணிகள் அமைச்சர் துவக்கி வைப்பு
/
வளர்ச்சிப் பணிகள் அமைச்சர் துவக்கி வைப்பு
ADDED : பிப் 25, 2024 06:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையின் பல பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.
அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி காமராஜர் நகரில் ரேஷன் கடை, தீர்த்தகரை, திருக்குமரன் நகர், பசும்பொன் நகரில் மேல்நிலை தொட்டிகள், கஞ்சநாயக்கன்பட்டி கிழக்குத் தெருவில் கலையரங்க கட்டடம், ஆண்டிப்பட்டியில் ரேஷன் கடை, வதுவார் பட்டியில் ஊராட்சி அலுவலக கட்டிடம், குறுந்தமடத்தில் கலையரங்க கட்டடம் உட்பட, ரூ. 1 கோடி 64 லட்சம் மதிப்பீட்டில் திறந்து வைத்தார். ஒன்றி குழு தலைவர் சசிகலா, அதிகாரிகள், கட்சியினர் கலந்து கொண்டனர்.